அமெரிக்கா மற்றும் உலகின் பிறபகுதிகளை சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது - டிரம்ப் குற்றச்சாட்டு


அமெரிக்கா மற்றும் உலகின் பிறபகுதிகளை சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது -  டிரம்ப் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 July 2020 6:00 PM GMT (Updated: 6 July 2020 6:00 PM GMT)

அமெரிக்கா மற்றும் உலகின் பிறபகுதிகளை சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

வாஷிங்டன்,

உலகம் முழுக்க கொரோனாவால் 11,604,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 537,716தொட்டுள்ளது. அமெரிக்காவில் 2,986,261 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 132,616 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் பாதிப்பு அதிகரித்த போதிலும் உயிரிழப்பு என்பது வேகமாக குறைந்து வருகிறது. நேற்று அமெரிக்காவில் 251 மட்டுமே இறந்தனர. ஆனால் நேற்று ஒரு நாளில் மட்டும் அங்கு 44530 பேர் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதால் அங்கு இயல்பு நிலையை திரும்பி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவில் சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவை தவிர்த்து உலக நாடுகளையும் சீனா சேதப்படுத்தி உள்ளது  என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிலிருந்து வந்த வைரசால் பாதிக்கப்படும் வரை அமெரிக்கா மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. தற்போது வைரஸ் தொடர்பான நடவடிக்கையிலும் நாம் நம்பமுடியாத அளவுக்குச் சிறப்பாகவே செயல்படுகிறோம்.

தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்துத் தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம். உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்குக் காரணம் இங்கு எடுக்கப்படும் சோதனைகள்தான் என்று டிரம்ப் சுதந்திரதினத்தையொட்டி ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையின் முன்பு திறந்த வெளியில் நாட்டு மக்களிடம் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.


Next Story