உலக செய்திகள்

இலங்கையில் கட்டுக்குள் வந்த கொரோனா: 3 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு + "||" + Sri Lanka schools to reopen from Monday after over-3 month long Covid-19 lockdown

இலங்கையில் கட்டுக்குள் வந்த கொரோனா: 3 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு

இலங்கையில் கட்டுக்குள் வந்த கொரோனா: 3 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு
இலங்கையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன
கொழும்பு,

இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி நாடு முழுவதும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு நிலவரத்தை தொடர்ந்து அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தன. இலங்கையில், 2000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 11 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தனர்.  அங்கு கட்டுப்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக தளர்த்தப்பட்டு இரவு நேரம் மற்றும் முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பிறகு , உள்ளூர்  மக்கள் மத்தியில் அங்கு புதிதாக நோய்த்தொற்று எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் முழு முடக்க கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டன.

இந்த நிலையில்,  இலங்கையில் 115 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கிரேடு 5,11,13 ஆகிய மாணவர்களுக்கான பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

கிரேடு 12 மற்றும் கிரேடு 10 ஆகிய மாணவர்களுக்கு ஜூலை 20 ஆம் தேதியும்  ஜூலை 27 ஆம் தேதி முதல் கிரேடு 3,4,6,7,8,9 ஆகிய மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும் என்று இலங்கை அரசின் கூடுதல் செயலர் ரஞ்சித் சந்திரசேகரா தெரிவித்துள்ளார்.

இறுதி கட்டமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி கிரேடு 1 மற்றும் 2- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி இருந்தால் பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் தீ
இலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுக்குள் கொண்டு வர இந்திய-இலங்கை கடற்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
2. இலங்கை கடலில் தீப்பிடித்து எரியும் கப்பலில் தீ கட்டுக்குள் வருகிறது
தீ விபத்துக்கு உள்ளான எம் டி டைமண்ட் கப்பல் 35 நாட்டிக்கல் மைல்கள் வெற்றிகரமாக இழுத்து வரப்பட்டது.
3. இலங்கையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல் - சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க தீவிர முயற்சி
இலங்கையில், கப்பலில் பிடித்த தீயை அணைக்க இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா என 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
4. "வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" - இலங்கை அரசு
பிராந்திய ரீதியிலான வெளியுறவு கொள்கை வகுப்பின் போது இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.
5. இலங்கையில் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி முடிந்தது - இந்திய தூதரகம் தகவல்
இலங்கையில் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.