பாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம்
பாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முசபராபாத்,
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஓடும் நீலம் மற்றும் ஜீலம் நதிகளில் சட்ட விரோதமாக கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அங்கு வசிக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முசாபரபாத் நகரில் திரண்ட பொதுமக்கள் பிரம்மாண்ட கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோலா நீர்மின் திட்டத்திற்காக கட்டப்படும் இந்த அணையால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். ஐநா விதிகளை மீறி பாகிஸ்தானும் சீனாவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும், கட்டுமானப்பணி நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம் எனவும் போராட்டக்காரர்கள் கூறினர்.
2.4 பில்லியன் டாலர் மதிப்பில் 1,124 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கும் பணிக்காக சீனா - பாகிஸ்தான் இடையே அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story