இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக் செயலியின் பயன்பாடுக்கு தடை


இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக் செயலியின் பயன்பாடுக்கு தடை
x
தினத்தந்தி 7 July 2020 6:22 PM GMT (Updated: 7 July 2020 6:22 PM GMT)

ஹாங்காங்கில் டிக்டாக் செயலியின் பயன்பாடு மற்றும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங், 

தேசிய பாதுகாப்பு நலன் கருதி இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்த தடையால் இந்தியாவில் இயங்க முடியாத நிலையில் இருந்து வரும் டிக் டாக் செயலி, ஹாங்காங்கில் தாமாக முன்வந்து இயங்குவதை நிறுத்தி உள்ளது. 

சீனாவின் தேசிய பாதுகாப்புச்சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஹாங்காங்கில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் சீன அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளத்தில் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட தொடங்கி உள்ளது. இதனால் ஹாங்காங்கின் தன்னாட்சி சுதந்திரம் பறிக்கப்படுவதாக எழுந்த தகவலையடுத்து ஹாங்காங் சந்தைகளிலிருந்தும் டிக்டாக் செயலி அகற்றப்படுவதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மேலும் பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர், கூகுள், டெலிகிராம் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும், ஹாங்காங்கில் தங்கள் செயல்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன.

Next Story