உலக செய்திகள்

அணு ஆயுத பேச்சுவார்த்தை : அமெரிக்காவுக்கு சவால் விடுத்துள்ள சீனா + "||" + China challenges US to cut nuclear arsenal to matching level

அணு ஆயுத பேச்சுவார்த்தை : அமெரிக்காவுக்கு சவால் விடுத்துள்ள சீனா

அணு ஆயுத பேச்சுவார்த்தை : அமெரிக்காவுக்கு சவால் விடுத்துள்ள சீனா
அணு ஆயுதம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் சேர பலமுறை அழைப்பு விடுத்த அமெரிக்காவுக்கு சீனா சவால் விடுத்துள்ளது.
பீஜிங்

அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை சீனாவின் மட்டத்திற்குக் குறைக்கத் தயாராக இருந்தால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான முத்தரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தையில் சீனா மகிழ்ச்சியாக பங்கேற்கும் என்று சீன மூத்த தூதரக அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் காலாவதியாகவுள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான முக்கிய அணு ஆயுத ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் சேர சீனாவுக்கு அமெரிக்கா பலமுறை அழைப்பு விடுத்துள்ளது.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சேர சீனாவிற்கு விருப்பம் இல்லை என சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர் ஃபூ காங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்ந்துள்ளது.
2. விண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின்னர் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள் !
அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்ந்துள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்ந்துள்ளது.
5. சீனா-ரஷியா உறவுகளில் விரிசல்; சீனா உளவு பார்த்ததாக ரஷியா குற்றச்சாட்டு
சீனா-ரஷியா உறவுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது சீனா உளவு பார்த்ததாக ரஷியாகுற்றம் சாட்டியது, எஸ் -400 ஏவுகணை வழங்குவதை ஒத்திவைக்கிறது.