ஜப்பானில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு


ஜப்பானில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 July 2020 3:00 AM IST (Updated: 9 July 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

ஜப்பானின் தெற்கு மாகாணங்களில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது 60 ஆக அதிகரித்துள்ளது


* நைஜீரியாவின் பென்யூ மாகாணம் பக்ரூதி நகரில் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை சீனாவின் அளவிற்கு குறைக்க ஒப்புக்கொண்டால் அமெரிக்கா மற்றும் ரஷியா இடையிலான ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தையில் தாங்கள் இணைவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

* ஜப்பானின் தெற்கு மாகாணங்களில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாகாணங்களில் உள்ள ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

* ஏமன் தலைநகர் சனாவில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தருகின்றன.


Next Story