உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து சீனா பகிரங்க குற்றச்சாட்டு


உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து சீனா பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 July 2020 9:42 AM GMT (Updated: 9 July 2020 9:42 AM GMT)

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது "சர்வதேச தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளை பின்னடைவை ஏற்படுத்தும் சீனா குற்றச்சாட்டி உள்ளது.

பீஜிங்

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிப்பு கடிதத்தை ஐ.நா. சபையில் அமெரிக்கா வழங்கியுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான முடிவு குறித்து சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:-

இந்த நடவடிக்கை "அமெரிக்கா ஒருதலைப்பட்சமான நடவடிகைகளை பின்பற்றுதல், அணிகளிடமிருந்து விலகுதல் மற்றும் ஒப்பந்தங்களை மீறுதல் ஆகியவற்றின் மற்றொரு நிரூபணம் ஆகும் 

உலக சுகாதார அமைப்பு என்பது உலகளாவிய பொது சுகாதார பாதுகாப்பு துறையில் மிகவும் அதிகாரப்பூர்வ மற்றும் தொழில்முறை சர்வதேச நிறுவனம் ஆகும்.

இந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது "சர்வதேச தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளை பின்னடைவை ஏற்படுத்தும், குறிப்பாக சர்வதேச ஆதரவின் அவசர தேவையில் வளரும் நாடுகளில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என கூறினார்.


Next Story