நீரவ் மோடியின் நீதிமன்றக்காவல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை நீட்டிப்பு - இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு


நீரவ் மோடியின் நீதிமன்றக்காவல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை நீட்டிப்பு - இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2020 12:02 PM GMT (Updated: 9 July 2020 12:02 PM GMT)

தொழிலதிபா் நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை இங்கிலாந்து நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

லண்டன்,

தொழிலதிபா் நீரவ் மோடி பல்வேறு நாடுகளில் வைரம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் கடந்த ஆண்டு ஜனவரியில் லண்டனுக்குத் தப்பிச் சென்றார். இதுதொடா்பாக, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம், இங்கிலாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது.

சிறையில் உள்ள நீரவ் மோடி, 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார். அதன்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீரவ் மோடி இன்று ஆஜா்படுத்தப்பட்டார். காணொலி முறையில் நடைபெற்ற விசாரணையில், நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story