நைஜீரியாவில் பள்ளிக்கூடங்களை திறக்கும் முடிவு திரும்பப்பெறப்பட்டது


நைஜீரியாவில் பள்ளிக்கூடங்களை திறக்கும் முடிவு திரும்பப்பெறப்பட்டது
x
தினத்தந்தி 9 July 2020 9:18 PM GMT (Updated: 9 July 2020 9:18 PM GMT)

நைஜீரியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால், பள்ளிக்கூடங்களை திறக்கும் முடிவு திரும்பப்பெறப்பட்டது


* வடகொரியாவில் இதுவரை அறிவிக்கப்படாத வோலோ ரி என்ற இடத்தில் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான செயல்பாடுகள் நடைபெறுவதை காட்டும் செயற்கை கோள் படங்கள் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

* நைஜீரியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத்தொடங்கி உள்ளதால், அங்கு பள்ளிக்கூடங்களை திறக்கும் முடிவை அந்த நாட்டு அரசு திரும்பப்பெற்றுள்ளது.

* பாகிஸ்தானில் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு 120 கோர்ட்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்துறை செயலாளருக்கு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

* ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் படையினருடன் நடைபெற்ற மோதல்களில் 23 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

* உள்நாட்டுப்போர் நடந்து வருகிற சிரியாவில் லட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பதற்கு துருக்கியில் இருந்து உதவிப்பொருட்களை வினியோகிப்பது கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதை நீட்டிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை ரஷியாவும், சீனாவும் மறுப்புரிமை ஓட்டை பயன்படுத்தி நிராகரித்து விட்டன.

* ஈரானும், சிரியாவும் ராணுவ ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளன. டமாஸ்கஸ் நகரில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் ஈரான் படைத்தலைவர் முகமது பாகேரியும், சிரியா ராணுவ மந்திரி அலி அப்துல்லா அயூப்பும் கையெழுத்திட்டனர். இது பெருகி வரும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்புக்கு வழி வகுக்கிறது.


Next Story