பாகிஸ்தான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை


பாகிஸ்தான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை
x
தினத்தந்தி 10 July 2020 8:31 AM IST (Updated: 10 July 2020 8:31 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் சர்வதேச விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

வாஷிங்டன்,

பாகிஸ்தான் சர்வதேச விமானங்கள் அமெரிக்காவிற்கு சிறப்பு தனி விமானங்களை இயக்க தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  பாகிஸ்தான் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள், விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முறைகேடான வழியை பின்பற்றியதை பாகிஸ்தான் அரசு சமீபத்தில் கண்டறிந்தது.

பாகிஸ்தான் விமானிகளில் மூன்றில் ஒரு பங்கினர் போலியானவர்கள் அல்லது முறைகேடுகள் மூலம் தேர்ச்சியடைந்தவர்கள் என பாகிஸ்தான் விசாரணையில் கண்டுபிடித்தது.இதையடுத்து,  பாகிஸ்தான் விமானங்களுக்கு ஆறு மாத காலம் ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது.

இந்த நிலையில், தற்போது அமெரிக்காவும் தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த மாதம் விமானிகளின் அலட்சியத்தால் விமானம் விபத்துக்குள்ளானதில் 97- பேர் பலியானது நினைவிருக்கலாம்.

Next Story