உலக செய்திகள்

சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 அதிகாரிகள் + "||" + 58 executives of Indian heritage lead firms with $1 trillion revenue

சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 அதிகாரிகள்

சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 அதிகாரிகள்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியஸ்போரா நிறுவனம், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் பணியாற்றுகின்றனர்.இதில், இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் குடியேறியோர் மற்றும் அமெரிக்கா, எத்தியோப்பியா, இங்கிலாந்து, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளியினரும் அடங்குவர்.

இவர்கள் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்நிறுவனங்களில் 36 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், இந்நிறுவனங்கள் ஆண்டுக்கு 23 சதவீத வருவாயை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

இது அமெரிக்க பங்குச்சந்தையில் 'எஸ் அண்டு பி' குறியீட்டில் உள்ள 500 நிறுவனங்கள் அளித்த 10 சதவீத வருவாயை விட அதிகமாகும்.இந்திய வம்சாவளி தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில், ஐந்து பெண்கள் இடம் 
பெற்றுள்ளனர்.இது, பார்ச்சூன் இதழின் டாப் 1000 நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள 61 பெண் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஒப்பிடும்போது, விகிதாச்சார அடிப்படையில் அதிகம்.

இந்த பட்டியலில் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் அஜய் பங்கா, வெர்டெக்ஸ் பார்மா நிறுவனத்தின் ரேஷ்மா கேவல்ரமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்: அமெரிக்கா
ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2. அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருந்து டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு காரணமாக ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
3. அமெரிக்காவில் எரிவாயு விபத்து: ஒருவர் பலி, அடுத்தடுத்த வீடுகள் பலத்த சேதம்
அமெரிக்காவின் மெரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் என்ற இடத்தில் இயற்கை எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது.
4. அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து
அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
5. உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது - தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி
உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.