300 குழந்தைகளை வன்கொடுமை செய்ததாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முதியவர்


300 குழந்தைகளை வன்கொடுமை செய்ததாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முதியவர்
x
தினத்தந்தி 10 July 2020 10:36 AM GMT (Updated: 10 July 2020 10:36 AM GMT)

இந்தோனேசியாவில் 300 குழந்தைகளை வன்கொடுமை செய்ததாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஜகார்த்தா

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த மாதம் 65 வயது மதிக்கத்தக்க பிராங்கோயிஸ் கமிலி அபல்லோ  என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவருடைய அறையில் இருந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபர் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருக்க மறுத்தவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

பிராங்கோயிஸ் லேப்டாப்பில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வீடியோ இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கு சுற்றுலா விசாவில் இவர் பல முறை நுழைந்துள்ளார்.

ஜகார்த்தா காவல்துறைத் தலைவர் நானா சுட்ஜானா,இந்த நபர் குழந்தைகளை அணுகி அவர்களிடம் ஆசையாக பேசி அவர்களை கவர்ந்திழுப்பார்.அவருடன் நெருக்கமாக இருக்க ஒப்புக்கொண்டவர்களுக்கு 250,000 முதல் ஒரு மில்லியன் ரூபியா வரை கொடுப்பார்.

அதாவது ரூ.1250 (17 டாலர் முதல் 20 டாலர்) ரூ.1500 வரை சம்பளமாக கொடுத்துவிடுவார். அப்படி நெருக்கமாக இருக்க ஒப்புக் கொள்ளாதவர்களை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார்.பல ஆண்டுகளாக பிராங்கோயிஸ்  இந்தோனேசிய குழந்தைகளை துன்புறுத்தியுள்ளதாகவும், இதில் பலியானவர்கள் இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிராங்கோயிஸ்  மரணதண்டனை எதிர்கொள்ள நேரிடம் என்று நேற்று உள்ளூர் ஊடக செய்தியாளர்களின் சந்திப்பின் போது போலீஸ்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுக்கு இவர் ஆளாகியுள்ளார்.சிறையில் ஆயுள் தண்டனை அல்லது துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறியுள்ளனர்.

இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் 70,000 குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்று உலகளாவிய கடத்தல் தடுப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story