அமெரிக்காவில் புதிய உச்சம்-ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க மாகாணங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அசுர வேகம் எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்து வேர்ல்டோமீட்டர்ஸ் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 71,388 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்தை கடந்து விட்டது. இந்த வைரசுக்கு அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 1.36 லட்சத்தை தாண்டி இருக்கிறது.
அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை அதிகரித்ததின் காரணமாகத்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு 4 கோடிப்பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story