உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்தார் + "||" + Trump commutes longtime adviser Roger Stone's prison sentence

டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்தார்

டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்தார்
டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்து உள்ளார்.
வாஷிங்டன்

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து நடந்த விசாரணையில் பொய்யான தகவல்களை கூறிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி டிரம்பின் நீண்ட கால ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் என்பவருக்கு 3 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை வெள்ளிக்கிழமை மாற்றினார்.

இது குறித்து வெள்ளைமாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் ரோஜர் ஸ்டோன் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் பலரைப் போலவே அவர் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டார். ரோஜர் ஸ்டோன் இப்போது ஒரு சுதந்திர மனிதர் என கூறி உள்ளது.

ஸ்டோனின் தண்டனையை மாற்றுவதற்கான டிரம்ப்பின் முடிவு, ஒரு கிரிமினல் வழக்கில் ஒரு கூட்டாளியைப் பாதுகாப்பதற்கான அவரது உறுதியான தலையீட்டையும், ஒரு கூட்டாளருக்கு பயனளிப்பதற்காக அவர் நிறைவேற்று ஒப்புதலைப் பயன்படுத்துவதையும் குறிக்கிறது.

டிரம்பின் நடவடிக்கையை பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆடம் ஷிஃப் கண்டித்து உள்ளார். "இந்த மாற்றத்தின் மூலம், அமெரிக்காவில் இரண்டு நீதி முறைகள் உள்ளன என்பதை டிரம்ப் தெளிவுபடுத்துகிறார்: ஒன்று அவரது குற்றவியல் நண்பர்களுக்கு, மற்றது அனைவருக்குமானது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது - டிரம்ப் டுவீட்
அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது என்று டொனால்டு டிரம்ப் கூறினார்.
2. அமெரிக்காவில் தொடரும் போராட்டம் : வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன் - டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தபோவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
3. வெள்ளைமாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்:பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப்
வெள்ளை மாளிகை போராட்டங்களின் போது டொனால்ட் டிரம்ப் நிலத்தடி பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுக்காக்கபட்டார் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.
4. டிரம்பின் டுவீட்களை டுவிட்டர் முதல் முறையாக உண்மை சோதனை அறிய லேபிளிடுகிறது
தவறாக வழிநடத்தும் டிரம்பின் டுவீட்களை டுவிட்டர் முதல் முறையாக உண்மை சோதனை அறியும் லேபிளிட்டு உள்ளது.
5. இந்தியா - அமெரிக்காவின் உறவு முன்பைவிட வலுவடைந்துள்ளது - பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு இந்திய அனைத்து விதத்திலும் உதவும் என்று ட்விட்டரில் பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.