ஈராக்கில் துருக்கி ராணுவ தாக்குதலில் குர்து போராளிகள் 8 பேர் பலி


ஈராக்கில் துருக்கி ராணுவ தாக்குதலில் குர்து போராளிகள் 8 பேர் பலி
x
தினத்தந்தி 11 July 2020 11:50 PM GMT (Updated: 11 July 2020 11:50 PM GMT)

ஈராக்கில் துருக்கி ராணுவ தாக்குதலில் குர்து போராளிகள் 8 பேர் பலியாகினர்.

பாக்தாத், 

துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் குர்திஸ்தான் என்று அழைக்கப்படும் தாயகத்தை உருவாக்குவதற்கு பாடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் சிரியாவின் அண்டை நாடான துருக்கி குர்துகளை பயங்கரவாதிகளாக கருதுகிறது. எனவே ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஈராக் எல்லையில் ஹாப்தியன் பிரந்தியத்தில் உள்ள குர்து போராளிகளின் நிலைகளை குறிவைத்து துருக்கி ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் குர்து போராளிகள் 8 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

Next Story