உலக செய்திகள்

கொரோனா வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட்;முககவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் பலி + "||" + Man, 37, dies of COVID after labelling it 'hype' on social media

கொரோனா வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட்;முககவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் பலி

கொரோனா வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட்;முககவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் பலி
"விளையாட்டு வினையானது"கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனக்கூறி முககவசம் அணீய மறுத்தவர் கொரோனாவால் பலியானார்.
வாஷிங்டன்

கொரோனா லட்சகணக்கான மக்களின் உயிரைப் பறித்துக்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு தடுப்பூச்சி மற்றும் சிகிச்சை இல்லை இதனை வராமல் தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசம் அணீவது மட்டுமே. ஆனால்  மாஸ்க் அணிய மறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஹீரோவாக எண்ணி அவரைப் போலவே மாஸ்க அணிய மறுத்துவரும் கூட்டம் ஒன்று அமெரிக்காவில் உள்ளது.

டிரம்பே இப்போது மாஸ்க் அணியத் தொடங்கி விட்டார், இந்த  நிலையில், டிரம்பை குருட்டுத்தனமாக பின்பற்றிய ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

ஒஹையோவைச் சேர்ந்த ரிச்சர்டு ரோஸ் (37), ஒரு தீவிர டிரம்ப் ரசிகர். முன்னாள் ராணுவ வீரரான ரிச்சர்டு, சமூக ஊடகங்களில் கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட், என்று கூறிவந்தார்.சமூக ஊடக பிரியரான ரிச்சர்டு, ஏப்ரல் 28 அன்று பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், நான் மாஸ்க் எல்லாம் வாங்க மாட்டேன், கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று எழுதியிருந்தார்.

ஆனால், ஜூலை 1ஆம் தேதி அன்று அவருக்கு உடல் நலமில்லாமல் போகவே, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனையின் முடிவுகள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தன. டிரம்பை ஆஹா ஓஹோவென புகழும் ரிச்சர்டு, ஜூலை 4ஆம் தேதி பரிதாபமாக கொரோனாவுக்கு பலியானார்.டிரம்பை பின்பற்றி உயிர்விட்ட முதல் நபர் அல்ல ரிச்சர்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடக்கம்: அனைத்து கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
2. மருத்துவத்துறையை ஆச்சரியப்பட வைத்த விஷயம் பிறந்த குழந்தையின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்தி
சிங்கப்பூரில் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்திகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
3. கொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் என பிரதமர் மோடி விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டார்.
4. இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவான கொரோனா வைரஸ் சீனா குற்றச்சாட்டு
கொரோனா வைரஸால் உலகமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரசின் தீவிரம் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வைரஸ் உருவான இடம் பற்றி சீனா மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியின் அவசர உரிமத்திற்கு விண்ணப்பிக்கப்படும் - சீரம் இன்ஸ்டிடியூட்
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியின் அவசர உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இன்று தெரிவித்துள்ளார்.