ரஷியாவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது - விமானி உடல் கருகி சாவு


ரஷியாவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது - விமானி உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 13 July 2020 9:45 PM GMT (Updated: 13 July 2020 7:40 PM GMT)

ரஷியாவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் விமானி உடல் கருகி உயிரிழந்தார்.

மாஸ்கோ, 

ரஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள நிஸ்னி நோவ்கோரோட் பிராந்தியத்தில் போல்ஷேபோல்டினஸ்கி நகரில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விவசாயப் பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. விமானத்தில் விமானியும் பயணி ஒருவரும் இருந்தனர்.

கிஸ்டனேவ்கா என்ற நகருக்கு அருகே தாழ்வாக பறந்த போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் கம்பியில் விமானம் உரசியது. இதில் நிலை தடுமாறிய விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். எனினும் விமானத்தில் இருந்த பயணி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

Next Story