அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பின் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை


அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பின் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை
x
தினத்தந்தி 13 July 2020 9:30 PM GMT (Updated: 13 July 2020 7:41 PM GMT)

அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பின் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், 

அமெரிக்காவின் ஒக்லஹோமாவை மாகாணத்தை சேர்ந்த டேனியல் லீ (வயது 47) என்பவர் கடந்த 1999ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 3 பேரை கொடூரமாக கொலை செய்தார்.

இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு அண்மையில் தீர்ப்பளித்தது.

அமெரிக்காவில், 17 ஆண்டுகளுக்கு பின், ஒரு குற்றவாளிக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது இது முதல் முறையாகும். லீக்கு, விஷ ஊசி செலுத்தி, தண்டனையை நிறைவேற்ற, நேற்று நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் லீயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ‘கொரோனா‘ வைரஸ் அச்சத்தால், தண்டனையை நிறைவேற்றுவதை நேரில் பார்க்க வர முடியாது என்பதால், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி கோர்ட்டை அணுகினர்.

அதனைத் தொடர்ந்து இண்டியானா மாகாணத்தின் தெற்கு மாவட்ட கோர்ட்டு மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, அமெரிக்க மேல்முறையீட்டு கோர்ட்டில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட இண்டியானா கோர்ட்டு உத்தரவை தள்ளுபடி செய்தார்.

இதன் மூலம் கொலை குற்றவாளி லீக்கு மரண தண்டனை நிறைவேற்ற கோர்ட்டு அனுமதி வழங்கியது.

Next Story