அமெரிக்காவில் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது
அமெரிக்காவில் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணம் ஹோலோமென் நகரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை யுஎஸ்ஏஎப் எப்16 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு விமானி மட்டும் இருந்தார்.
புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானி உடனடியாக விமானத்தை விமானப்படை தளத்துக்கு திருப்பினார். அங்கு அவர் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையை நோக்கி வேகமாக சென்றது. அதனைத் தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளாக இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அதன் பின்னர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story