உலக செய்திகள்

கடவுள் ராமர் குறித்த சர்ச்சை கருத்து வலுக்கும் எதிர்ப்பை தொடர்ந்து பின்வாங்கிய நேபாள பிரதமர் + "||" + ‘Not debasing Ayodhya’: Nepal in damage control after Oli’s Ramayana fiasco

கடவுள் ராமர் குறித்த சர்ச்சை கருத்து வலுக்கும் எதிர்ப்பை தொடர்ந்து பின்வாங்கிய நேபாள பிரதமர்

கடவுள் ராமர் குறித்த சர்ச்சை கருத்து வலுக்கும் எதிர்ப்பை தொடர்ந்து பின்வாங்கிய நேபாள பிரதமர்
கடவுள் ராமர் குறித்து சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பை தொடர்ந்து பின்வாங்கினார் நேபாள பிரதமர் சர்மா ஒலி
காட்மாண்டு

அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நேபாளம்  லிபுலேக் கணவாய் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது. தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார் . தற்போது புதிய சர்ச்சை  கருத்தை வெளியிட்டு உள்ளார்.

தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் வசித்த அயோத்தி என்பது இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் அல்ல என்றும், நேபாளத்தின் பிர்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம் ஆகும்.(காட்மாண்டுவில் இருந்து 135 கீமீ தூரத்தில் உள்ளது)

நாங்கள் கலாச்சார ரீதியாக சற்று ஒடுக்கப்பட்டிருக்கிறோம். உண்மைகள் அத்துமீறப்பட்டுள்ளன எனகூறினார்.

நேபாள பிரதமரின் கருத்தை அடிப்படையற்ற , வரலாற்று ஆதாரம் இல்லாத வெறும் பேச்சு என்று இந்திய அரசும் அக்கருத்தை நிராகரித்தது.

சர்மா ஒலி கூறிய கருத்துக்கு இந்து மதத் தலைவர்களும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவசரமாக நேபாள அரசு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. சர்மா ஒலியின் கருத்துகள் மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கத்துடன் கூறப்படவில்லை என்றும் அயோத்தியின் சிறப்பையும் பண்பாட்டு ரீதியாக அதற்கு உள்ள பெருமையையும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கடவுள் ராமர் இந்தியர் அல்ல நேபாளி; இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபடுகிறது- நேபாள பிரதமர் சர்ச்சை கருத்து
ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.