இந்தியாவுக்கு எதிரான "ஆக்ரோஷமான" நடவடிக்கைகள் சீனா சிந்தனையை காட்டுகிறது- அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்


இந்தியாவுக்கு எதிரான ஆக்ரோஷமான நடவடிக்கைகள் சீனா  சிந்தனையை காட்டுகிறது- அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
x
தினத்தந்தி 15 July 2020 8:30 AM GMT (Updated: 15 July 2020 8:30 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான சீனாவின் "மிகவும் ஆக்ரோஷமான" நடவடிக்கைகள் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு சிந்திக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்து உள்ளார்.

வாஷிங்டன்

கிழக்கு லடாக்கில் இந்திய வீரர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் மற்றும் தென் சீனக் கடல் மற்றும் ஹாங்காங்கில் அதன் நகர்வுகள் உட்பட இந்தியாவுக்கு எதிரான சீனாவின் "மிகவும் ஆக்ரோஷமான" நடவடிக்கைகள் சீனாவின் ஆளும்  கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு சிந்திக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது என  அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்து உள்ளார்.

மே 5 முதல் கிழக்கு லடாக்கில் பல இடங்களில் இந்திய மற்றும் சீனப் படைகள் மோதலில் ஈடுபட்டன. ஜூன் 15 ந்தேதி  கல்வான் பள்ளத்தாக்கில் இதில் சீன வீரர்களுடன் வன்முறையில் ஈடுபட்டதால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியதாவது:-

சீனர்கள் இந்தியாவுடன் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர். இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒரு தகராறு, ஆனால் அது என்னவென்று சீனா தன்னைக் காட்டிக் கொண்டது. சீன துருப்புக்கள்  பதுங்கியிருந்து 20 இந்தியர்களை அடித்து கொலை செய்தனர்.

அவர்கள் நகங்களைக் கொண்டும முள் கொண்ட ஆயுதம் கொண்டும் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டனர்.

உண்மையில், கொரோனா நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் நான் ஜனாதிபதி  டிரம்புடன் சென்ற கடைசி வெளிநாட்டு பயணம் இந்தியாவாக இருந்தது, அங்குள்ள இந்திய மக்கள் எங்களுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர்.

அவர்களுக்கும் எங்களுக்கு நிறைய பொதுவானதாக உள்ளது.  நாங்கள் ஆங்கிலம் பேசுகிறோம், நாங்கள் ஜனநாயக நாடுகள். இந்தியாவுடன் எங்களுக்கு வளர்ந்து வரும், மிகவும் வலுவான உறவு கிடைத்துள்ளது.

"ஆனால் இந்தியா மீதான சீனாவின் நடவடிக்கை, தென் சீனக் கடலில் அதன் நடவடிக்கைகளைப் போலவே, ஹாங்காங்கிலும் என்ன செய்கிறதோ அதேபோலவே உள்ளது. தைவானில் கொடுமைப்படுத்துதல் மிரட்டல் போலவே, சீன கம்யூனிஸ்ட் கட்சி இவற்றை சிந்திக்கிறது என்பதைப் பற்றிய ஒரு தெளிவான பாதையை கடந்த காலங்களில் கண்டு இருப்பீர்கள்.

1.3 மில்லியன் சதுர மைல் தென் சீனக் கடல் முழுவதையும் சீனா தனது பகுதி என்று கூறுகிறது. புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளால் உரிமை கோரப்பட்ட பகுதிகளில் செயற்கைத் தீவுகளில் சீனா ராணுவ தளங்களை உருவாக்கி வருகிறது. இது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒன்று ஓ'பிரையன் கூறினார்.


Next Story