உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் + "||" + Terrible earthquake in Indonesia

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜகார்த்தா, 

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ருடெங் நகரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 600 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தின்போது ருடெங் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடுகள் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக பதிவானபோதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. இந்தோனேசியா நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 11 பேர் பலி
இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
2. இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை
இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை விதிக்கப்படுகிறது.
3. இந்தோனேசியாவில் இன்று காலை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிகவும் சக்தி வாய்ந்த கடல் பகுதியில் ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டது,
4. இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியது
இந்தோனேசியாவின் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியுள்ளது.
5. இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் பறந்த சாம்பல் துகள்கள்
இந்தோனேசியாவில் எரிமலை இன்று வெடித்ததில், 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் சாம்பல் துகள்கள் பறந்தன.