ஹேக்கிங் பிரச்சினை: டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்


ஹேக்கிங் பிரச்சினை: டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
x
தினத்தந்தி 18 July 2020 4:30 PM GMT (Updated: 18 July 2020 4:30 PM GMT)

ஹேக்கிங் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

  அமெரிக்க முன்னாள் அதிபர், பராக் ஒபாமா, பிரபல தொழிலதிபர்கள், எலான் மஸ்க், பில்கேட்ஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடனின்,  உள்ளிட்ட  பல பிரபலங்களின் 'டுவிட்டர்' சமூக வலைத்தள , கணக்குகள் கடந்த சில தினங்களுக்கு முன்  ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.  பிட் காயின் மோசடி நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தள பயனாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை இந்த விவகாரம் ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஹேக்கிங் விவகாரம் குறித்து முழு விளக்கம் அளிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 இந்தியாவின் சைபர் செக்யூரிட்டி நோடல் ஏஜென்சியான  CERT, டுவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில், டுவிட்டர் சமூக வலைதளகணக்குகள் முடக்கப்பட்டதில், எத்தனை இந்திய பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய டுவிட்டுகள் மற்றும் இணையதள லிங்குகளை எத்தனை இந்தியர்கள் பார்த்துள்ளனர். அதில் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா?
டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?  என்பது குறித்து  விளக்கம் அளிக்கும் படி கோரப்பட்டுள்ளது.

Next Story