உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 21 July 2020 9:30 PM GMT (Updated: 21 July 2020 6:52 PM GMT)

உலகைச் சுற்றி...

* வியட்நாமின் மத்திய மாகாணமான பின் துவானில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி பஸ் ஒன்று எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* லிபியா நாட்டின் கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்த 240 அகதிகளை பத்திரமாக மீட்டு உள்ளதாக லிபிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவின் போர்ட்லேண்ட் மட்டும் சிகாகோ நகரங்களில் போலீசாருக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க அங்கு குவிக்கப்பட்டுள்ள மத்திய படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அந்த நகரங்களின் மேயர்கள் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

* ஈராக் பிரதமர் முஸ்தபா அல்காதிமி அரசு முறை பயணமாக நேற்று ஈரான் சென்றார். ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி அழைப்பை ஏற்று அவர் அங்கு சென்றுள்ளார்.

* சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி சீனாவின் 11 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

* ஹாங்காங்கில் சீனாவின் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, முதல் முறையாக ஹாங்காங்கின் ஜனநாயக ஆர்வலர்கள் அரசுக்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தினர்.

Next Story