அமெரிக்கா உள்பட பல நாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது; மைக் பாம்பியோ பேட்டி


அமெரிக்கா உள்பட பல நாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது; மைக் பாம்பியோ பேட்டி
x
தினத்தந்தி 22 July 2020 3:53 PM GMT (Updated: 22 July 2020 3:53 PM GMT)

அமெரிக்கா உள்பட பல நாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ பேட்டியில் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சீன கம்யூனிஸ்டு கட்சியால் (சீன அரசு) விடப்பட்ட சவாலை காண கூடிய நேரத்தில், ஜனநாயக நாடுகளான நம்மை போன்றோர் இணைந்து பணிபுரிய வேண்டியது முக்கியம்.

அந்நாட்டு ராணுவத்தினர் தொடங்கி வைத்த மோதல்கள் சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஏற்று கொள்ள முடியாத அணுகுமுறைகளுக்கு எடுத்துக்காட்டுகள்.  இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தினை தருகிறது.

உலக நாடுகளுக்கு பொருட்களை வினியோகிக்கும் சங்கிலி தொடரில் சீனாவிடம் இருந்து விலகி இருப்பதனை ஆய்வு செய்யவும், தொலைதொடர்பு, மருந்து பொருட்கள் வினியோகம் மற்றும் பிற துறைகளில் சீன நிறுவனங்களை சார்ந்து இருப்பதனை குறைத்து கொள்ளவும் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையை இந்தியா அடைந்துள்ளது.  ஏனெனில் அமெரிக்கா உள்பட பல நாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

Next Story