உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும்- உலக சுகாதார அமைப்பு + "||" + Coronavirus vaccine update | Don't expect first COVID-19 vaccinations until early 2021: WHO

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும்- உலக சுகாதார அமைப்பு

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும்- உலக சுகாதார அமைப்பு
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஜெனீவா

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

அடுத்த ஆண்டின் தொடக்கம் வரையில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை எதிர்பார்க்க வேண்டாம் என, உலக சுகாதார அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் அவசர காலத் திட்டத்தின் தலைவர் மைக் ரியான், நோய்த்தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும், ஆனால் அவற்றின் பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தைச் சார்ந்து இல்லாமல் தேவையை பொறுத்து தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்ய செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைக்கும் வரையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவின் கொரோனா ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை
ரஷியாவின் கொரோனா ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
2. கொரோனா தடுப்பூசி பற்றிய டிரம்பின் அறிவிப்பில் நம்பிக்கை இல்லை: கமலா ஹாரிஸ் சொல்கிறார்
கொரோனா தடுப்பூசி பற்றிய டிரம்பின் அறிவிப்பில் நம்பிக்கை இல்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் - ஐ.நா. சபை தலைவர் வலியுறுத்தல்
கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. சபையின் தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே வலியுறுத்தி உள்ளார்.
4. கொரோனா தடுப்பூசியை உருவாக்க உலக சுகாதார நிறுவனத்துடன் சேர மாட்டோம் - அமெரிக்கா அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்கான தடுப்பூசியை கண்டு பிடிக்கவும், வினியோகிக்கவும் உலக சுகாதார நிறுவனத்துடன் சேர மாட்டோம் என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
5. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷியா நாடுகிறது
கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷியா நாடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.