டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா தொற்று


டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 27 July 2020 2:41 PM GMT (Updated: 27 July 2020 2:41 PM GMT)

அமரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  ராபர்ட் ஓ பிரைனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஓ பிரைன்,  கொரோனா உறுதி செய்யப்பட்டதும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும்  பாதுகாப்பாக தனது வீட்டில் இருந்தே பணியாற்றி வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் அபாயம் இல்லை எனவும் வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காதான் உள்ளது.  தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் மட்டும் 43 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 149,864 ஆக உள்ளது.  

Next Story