அமெரிக்கா விஞ்ஞானிகளை வைத்து கொரோனாவை நாங்கள் வெற்றி அடையும் - டொனால்டு டிரம்ப் உறுதி


அமெரிக்கா விஞ்ஞானிகளை வைத்து கொரோனாவை நாங்கள் வெற்றி அடையும் - டொனால்டு டிரம்ப் உறுதி
x
தினத்தந்தி 28 July 2020 5:35 AM GMT (Updated: 28 July 2020 5:35 AM GMT)

அமெரிக்கா விஞ்ஞானிகளை கட்டவிழ்த்துவிட்டு வைரஸுக்கு எதிரான வெற்றியை நாங்கள் அடைவோம் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.

வாஷிங்டன்

கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கையில் அமெரிக்கா இன்னும் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் 4,286,663 பாதிப்புகள் பதிவாகி உள்ளது. இதில் 147,588 க்கும் மேற்பட்டோர் இதுவரை இந்த நோயால் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று  வட கரோலினா மாநிலத்தில் ஒரு கொரோனா தடுப்பூசி ஆய்வை  பார்வையிட்டபோது, "அமெரிக்கா அறிவியல் விஞ்ஞானிகளை  கட்டவிழ்த்துவிட்டு" கொரோனா வைரஸை தோற்கடிப்பதாக உறுதியளித்தார்.

அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி ஏற்கனவே தொடக்ககட்ட சோதனைகளை முடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது.

இதில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு உண்மையான மருந்தும், மீதமுள்ளவர்களுக்கு போலி மருந்தும் செலுத்தப்பட்டது.

இவர்கள் அனைவரையும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒரே முறையாக 30 ஆயிரம் பேரிடம் தடுப்பூசி பரிசோதனை நடத்துவது முக்கியமான சாதனையாகும்.

முன்னதாக இந்த தடுப்பூசியை பல்வேறு இனத்தினர், பலவேறு வயதுக்குட்பட்டவர்கள் என அமெரிக்காவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் மக்களிடம் செலுத்தி சோதிக்க வேண்டியது முக்கியமானது என டாக்டர்கள் கூறியிருந்தனர். அந்தவகையில் தற்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களிடம் இந்த தடுப்பூசி செலுத்தி சோதிக்கப்படுகிறது.

கொரோனவுக்கு எதிரான போர் என்ற திட்டத்தி  கீழ் தடுப்பூசி மேம்பாட்டு முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்காக அமெரிக்கா மார்ச் முதல் 6.3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது.

கொரோனா மருந்துகளை "உலகளாவிய பொது நன்மை" என்று அழைத்த ஐரோப்பிய தலைவர்களைப் போலல்லாமல், முதலில் அமெரிக்க மக்களுக்கு தடுப்பூசிகளை வாழங்குவதே நோக்கமாக கொண்டு  இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.

மோரிஸ்வில்லில் உள்ள புஜிஃபிலிம் டையோசிந்த் பயோடெக்னாலஜிஸ் ஆய்வகத்தில்  ஆய்வு நடத்திய அமரிக்க ஜனாதிபதி செய்தியாளர்களிடம் கூறும் போது "அமெரிக்கா அறிவியல் விஞ்ஞானிகளை  கட்டவிழ்த்துவிட்டு" கொரோனா வைரஸை தோற்கடிக்கும் என உறுதியளித்தார்.


Next Story