உலக செய்திகள்

போலி அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை நிலத்தடி பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்திய ஈரான் + "||" + Iran launches underground ballistic missiles during exercise

போலி அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை நிலத்தடி பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்திய ஈரான்

போலி அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை நிலத்தடி பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்திய ஈரான்
அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை குறிவைக்கும் வகையில் ஈரான் நிலத்தடி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
தெஹ்ரான்

வளைகுடா கடலில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் இந்த  நேரத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.நபிகள் நாயகம் 14 என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சிகள் ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

அமெரிக்கா வழக்கமாக வளைகுடாவில் பயணிக்கும் விமானம் தாங்கிக் கப்பலை போலவே போலி கப்பலை வடிவமைத்து அதன் இருபுறமும் போலி போர் விமானங்களை வைத்து ஈரான் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

போலி கப்பலை சுற்றி பல்வேறு கோணங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவி பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, அவற்றில் சில கப்பலில் இருந்த போலி விமானங்களை குறிவைத்துள்ளன.

ஈரான் ஹெலிகாப்டரில் இருந்து சுடப்பட்ட மற்றொரு ஏவுகணை போலி போர்க்கப்பலின் ஒரு பக்கத்தைத் தாக்கியது.

இதன் ஒரு பகுதியாக நிலத்தடி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியும் சோதனை நடத்தியது 

இந்த பயிற்சி ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க படைகள் எச்சரிக்கையுடன் இருக்க வழிவகுத்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க கடற்படையின் பஹ்ரைனை தளமாகக் கொண்ட ஐந்தாவது கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் ரெபேக்கா ரெபரிச் கூறுகையில், கடல்சார் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் தற்காப்புப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை கூட்டுப்படைகளுடன் நடத்துகிறது.

அதேசமயம், ஈரான் தாக்குதல் பயிற்சிகளை நடத்துகிறது, மிரட்டவும் மோதலை தூண்டவும் ஈரான் முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் எரிவாயு விபத்து: ஒருவர் பலி, அடுத்தடுத்த வீடுகள் பலத்த சேதம்
அமெரிக்காவின் மெரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் என்ற இடத்தில் இயற்கை எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது.
2. அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா - ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது-அமெரிக்க புலனாய்வுத்துறை
அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது என அமெரிக்க புலனாய்வுத்துறை கூறி உள்ளது.
3. அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து
அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
4. உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது - தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி
உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.
5. பெய்ரூட் வெடிவிபத்து: வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும்- டொனால்டு டிரம்ப் சந்தேகம்
பெய்ரூட் வெடிவிபத்து வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.