உலக செய்திகள்

இங்கிலாந்தில் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை + "||" + Coronavirus: Boris Johnson warns of Europe 'second wave' amid Spain row

இங்கிலாந்தில் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
இங்கிலாந்தில் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.
லண்டன்

இங்கிலாந்தில் கடந்த வாரம் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்தது.இந்த் நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து பிரதமர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆங்காங்கு கொரோனா தொற்று உருவாகி வருவது பிரதமரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மூத்த அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், கடந்த ஏழு நாட்களில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை, ஏப்ரலுக்குப் பிறகு அதிகம் பதிவான எண்ணிக்கை என கருதப்படுகிறது.

கடந்த ஏழு நாட்களில் சரசரியாக 700 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மூன்று வாரங்களுக்கு முந்தைய எண்ணிக்கையை ஒப்பிட்டால் 28 சதவிகிதம் அதிகமாகும்.இந்த குளிர்காலத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து அமைச்சர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதற்கு முன்பாக, அதாவது குளிர்காலத்திற்கு முன்பாகவே அது தாக்கலாம் என தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் நாட்டிங்காம் சென்றிருந்த போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து நாட்டவர்கள் பின்பற்றி வந்த பாதுகாப்பு நடைமுறைகளை விட்டுவிடக்கூடாது என்று வலியுறுத்தினார்.

தற்செயலாகக்கூட கொரோனா பரவ அனுமதிக்கக்கூடாது என்று கூறிய அவர், விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தமுடியும் என்றார்.என்றாலும், ஐரோப்பாவின் பிற பாகங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என்பதால் நாமும் கவனமாக இருப்பது அவசியம் என்றார் அவர்.


தொடர்புடைய செய்திகள்

1. முதல் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகள் எல்லாவற்றையும் தீர்த்துவிடாது - முன்னணி தொற்றுநோய் ஆலோசகர்
முதல் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகள் எல்லாவற்றையும் தீர்த்து விடாது என இங்கிலாந்து அரசின் முன்னணி தொற்றுநோய் ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.
2. கொரோனா ஆரம்ப கட்டத்தில் இங்கிலாந்து அரசு கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தாதது தவறு -எம்.பிக்கள் குழு
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய ஆரம்ப கட்டத்திலே இங்கிலாந்து அரசு கடுமையான எல்லை நடவடிக்கைகளை அமல்படுத்தாதது மிகப்பெரிய தவறு என்று உள்துறை விவகாரக் குழு கூறியுள்ளது.
3. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு குறித்து பரிசீலனை? முக்கிய தகவல்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. கொரோனாவிலிருந்து விடுபட்டாலும் ; தொடரும் வேதனை விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி: இங்கிலாந்து அறிவியலாளர்கள் ஆய்வில் வெளியாகி உள்ளது.
5. கொரோனா 2-வது அலை இங்கிலாந்தில் 1,20,000 பேர் மரணம்; எச்சரித்த விஞ்ஞானிகள்! பிரதமர் எடுத்த நடவடிக்கை
கொரோனா 2-வது அலை இங்கிலாந்தில் 1,20,000 பேர் மரணம் என எச்சரித்த விஞ்ஞானிகள்! இதை தடுக்க தேசிய சுகாதார சேவை அமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.