உலக செய்திகள்

ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள் சுட்டுக்கொலை: ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டுழியம் + "||" + 2 army officers shot dead in Iraq: by IS terrorists

ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள் சுட்டுக்கொலை: ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டுழியம்

ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள் சுட்டுக்கொலை: ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டுழியம்
ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாக்தாத், 

ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது.

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் போன்ற அதிபயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒழிக்க ஈராக் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஈராக்கின் மேற்கு பகுதியில் உள்ள ஹீத் நகரில் ராணுவ சோதனை சாவடி மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ அதிகாரிகளும், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஈராக், ஆப்கானிஸ்தானில் படைகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு - தலிபான் வரவேற்பு
ஈராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாக பெண்டகன் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு தலிபான் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
2. ஹரியானாவில் பட்டப்பகலில் இளம்பெண் சுட்டுக்கொலை; 2 பேர் கைது
ஹரியானாவில் இரண்டு வாலிபர்கள் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரை சுட்டுகொன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. கட்சிரோலியில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
கட்சிரோலியில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
4. ஈராக்கில் இருந்து 2,200 ராணுவ வீரர்களை திருப்பி அழைத்தது அமெரிக்கா
ஈராக்கில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களில், 2 ஆயிரத்து 200 பேரை அமெரிக்கா தன் நாட்டிற்கு திரும்ப அழைத்துள்ளது.
5. இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லக்கா கூட்டாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.