உலக செய்திகள்

வெளிநாட்டில் இந்திய நர்ஸ் கொடூரமாக குத்திக்கொலை ; கணவன் வெறிச்செயல் + "||" + Indian Nurse Stabbed "Multiple Times", "Struck By A Vehicle" In US: Cops

வெளிநாட்டில் இந்திய நர்ஸ் கொடூரமாக குத்திக்கொலை ; கணவன் வெறிச்செயல்

வெளிநாட்டில் இந்திய நர்ஸ் கொடூரமாக குத்திக்கொலை ; கணவன் வெறிச்செயல்
வெளிநாட்டில் மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்த கணவன்! பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகி உள்ளது.
புளோரிடா

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின், சேர்ந்தவர் மோனிப்பள்ளியை சேர்ந்தவர் மெரின் ஜாய் 26 வயதான இவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக பணிக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, திடீரென்று மர்ம நபர் ஒருவரால் பல முறை கத்தியால் குத்தப்பட்டு மற்றும் காரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது தொடரபாக போலீசார் பிலிப்மேத்யூ (34) என்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த பெண்ணின் கணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரி பிராட் பிகொவொன் கூறுகையில், மெரரின் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, அந்த நபர் அவரை இழுத்து பல முறை கத்தியால் குத்தி உள்ளார்.இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட போதும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என கூறினார்

இந்த தம்பதி கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருவதாகவும், குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து வருவதால் மெரின்  மற்றும் அவரின் தாய் பிலிப்பை பார்க்கவே விடவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், பிலிப் தன் மகள் மற்றும் மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். இருப்பினும் கடந்த திங்கட் கிழமை குழந்தையை ஒரு போதும் பார்க்க உன்னை அனுமதிக்காமாட்டார்கள் என்று பிலிப்பிடம், ஜாய் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பிலிப் மறுநாள் காலையில் வேலை முடித்து வந்த மனைவியை அந்த ஆத்திரத்தில் குத்திவிட்டதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.