உலக செய்திகள்

தொடர்ந்து 3 வது நாளாக சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று + "||" + China reports more than 100 new Covid-19 cases for third day in a row

தொடர்ந்து 3 வது நாளாக சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தொடர்ந்து 3 வது நாளாக சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
சீனா தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 100 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது.
பீஜிங்

உலகம் முழுவதும் கொரோனதொற்றுக்கு  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,75,757 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்து உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 1,74,53,103 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,921,667 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,467 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 1464 பேர் உயிரிழந்தை தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1.44 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 46.34 லட்சத்தை தாண்டியது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 22.83 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் நேற்று 127 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை காலை தெரிவித்துள்ளது. சீனா தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 100 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது.

புதிய பாதிப்புகள்  123 உள்நாட்டில் பரவியது, 112 தொலைதூர மேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கிலும், மீதமுள்ளவை வடகிழக்கு மாகாணமான லியாவோனிங்கிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. முதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து
முதன்முதலாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த பெருமையை பெற தீவிரமாக செயல்படும் நாடு! அதனால் வரப்போகும் ஆபத்து.
2. அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா - ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது-அமெரிக்க புலனாய்வுத்துறை
அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது என அமெரிக்க புலனாய்வுத்துறை கூறி உள்ளது.
3. சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்
சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
4. நாளுக்குநாள் பலூன் போல் ஊதிக்கொண்டே செல்லும் பெண்ணின் வயிறு வெடித்துவிடுமோ என அச்சம்
சீனாவில் பெண் ஒருவரின் வயிறு பலூன் போல் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டே செல்லும் நிலையில், அதன் காரணம் அறியாமல் மருத்துவர்களே திகைத்துப்போயுள்ளார்கள்.
5. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.