உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்வு + "||" + world wide Corona case positive cases details

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவலால் வல்லரசு நாடான அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்னும் சில மருத்துவ பரிசோதனைகள் எஞ்சியுள்ளதால், கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனால், மனித குலத்திற்கு இன்னும் பெரும் சவாலாகவே கொரோனா வைரஸ் விளங்கி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  18,226,598-ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  6,92,420 ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  11,439,262- ஆக உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் ஊரடங்கு அக்.31 ஆம் தேதி வரை நீட்டிப்பு
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மராட்டியத்தில் ஊரடங்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா தொற்று குணமடைந்த நோயாளிகளுக்கு பல்வேறு பக்க விளைவுகள் - எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
3. ஜம்மு காஷ்மீரில் மேலும் 975 பேருக்கு கொரோனா
ஜம்மு காஷ்மீரில் மேலும் 975- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது
மராட்டியத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது.
5. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,269 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
சென்னையில் மட்டும் 1,277-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

ஆசிரியரின் தேர்வுகள்...