விண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின்னர் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள் !


விண்வெளியில்  2 மாத ஆய்வுக்கு பின்னர் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள் !
x
தினத்தந்தி 3 Aug 2020 2:50 AM GMT (Updated: 3 Aug 2020 2:50 AM GMT)

அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது. கடந்த மே 31-ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் மூலம் பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS-ல்) இரண்டு மாதங்களுக்கும் மேலாக தங்கி ஆராய்ச்சி செய்து வந்த ராபர்ட் பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஹர்லி ஆகியோர் அங்கிருந்து புதிய க்ரூ டிராகனில் சனிக்கிழமை பூமிக்கு புறப்பட்டனர். சுமார் 21 மணி நேர பயணித்த இருவரும் அதிகாலை இருவரும் மெக்ஸிகோவின் வளைகுடா கடல்பகுதியில் தரையிறங்கினர்.  17,500 மைல் வேகத்தில் வந்த பாரசூட் படிப்படியாக 15 மைல் வேகத்திற்கு குறைக்கப்பட்டது.  

டிராகன்  பாரசூட் தரையிறங்கியதும் படகு மூலம் கடற்கரைக்கு அழைத்து வரப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரை சந்திக்க வீரர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஸ்பிளாஷடவுன் என்று சொல்லப்படும் தண்ணீரில் தரையிறங்குவதை நாசா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

Next Story