வருகிற 5 ஆம் தேதி இலங்கையில் பொது தேர்தல் - 225 இடங்களுக்கு, 7,452 பேர் போட்டி


வருகிற 5 ஆம் தேதி இலங்கையில் பொது தேர்தல் - 225 இடங்களுக்கு, 7,452 பேர் போட்டி
x
தினத்தந்தி 3 Aug 2020 11:51 AM GMT (Updated: 3 Aug 2020 11:51 AM GMT)

இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற 5-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

கொழும்பு,

இலங்கையில் நாளை மறுதினம், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 482 பேர் போட்டியிடுகின்றனர். 

நாடு முழுவதிலுமான வாக்காளர் எண்ணிக்கை, ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 ஆகும். இந்த தேர்தலுக்கு, 12 ஆயிரத்து 985 வாக்கு பதிவு மையங்கள், உள்ள நிலையில், 71 இடங்களில், வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்களின் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறுவது இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக கருதப்படுகிறது. 

Next Story