ஹெச்1பி விசாதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு


ஹெச்1பி விசாதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
x
தினத்தந்தி 4 Aug 2020 7:57 AM GMT (Updated: 4 Aug 2020 7:57 AM GMT)

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த ஹெச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.

டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, ஹெச்.1 பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார். இந்த நிலையில்,  அமெரிக்காவின் மத்திய முகமைகள் ஒப்பந்த அடிப்படையில், ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களை பணியில் அமர்த்துவதற்கும் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான நிறைவேற்று உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் 2020 இறுதி வரை ஹெச்.1 பி விசா மற்றும் இதர வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படாது என்று ஜுன் 23 ஆம் தேதி அறிவித்த நிலையில், புதிய கெடுபிடிகளை அறிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் இந்த புதிய உத்தரவு பற்றி கூறும்போது, “அமெரிக்க அரசு ஒரேயொரு எளிமையான விதியின் கீழ் செயல்படுவதை உறுதி செய்யும் உத்தரவில் இன்று நான் கையெழுத்திடுகிறேன். அதாவது அமெரிக்கர்களை வேலைக்கு எடுங்கள்,

அமெரிக்கர்களுக்கு ஒப்பந்தம் கொடுங்கள் என்பதே  ஆகும். அதாவது எந்த ஒரு அமெரிக்க ஊழியரையும் வெளியே அனுப்பி விட்டு சம்பளம் குறைவாக பெறுகிறார்கள் என்பதற்காக வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்துவதை செய்யக் கூடாது. ஹெச்1பி விசா அமெரிக்க வேலைகளை அழிப்பதற்கானதல்ல” என்று கூறினார். 

Next Story