பிலிப்பைன்ஸில் மேலும் 6,352 பேர் கொரோனாவால் பாதிப்பு


பிலிப்பைன்ஸில் மேலும் 6,352 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2020 3:26 PM GMT (Updated: 4 Aug 2020 3:26 PM GMT)

பிலிப்பைன்ஸில் இன்று மேலும் 6,352 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மணிலா, 

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கி உள்ளது. 

இந்நிலையில் பிலிப்பைன்சில் இன்று மேலும் 6,352 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிலிப்பைன்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,12,593 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 2,115 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 66,049 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 44,429 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிலிப்பைன்ஸ் 24வது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (48,70,973 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (27,51,665 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(18,78,382 பேர்) உள்ளன. 


Next Story