உலக செய்திகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்திவாய்ந்த வெடி விபத்து + "||" + Massive explosion shakes Lebanon’s capital Beirut

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்திவாய்ந்த வெடி விபத்து

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்திவாய்ந்த வெடி விபத்து
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்திவாய்ந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
பெய்ரூட், 

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை இன்று ஒரு பெரிய வெடிப்பு உலுக்கியது, ஆனால் இந்த வெடி விபத்து குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.

பிற்பகலில் நிகழ்ந்த இந்த வெடி விபத்து தலைநகரின் பல பகுதிகளில் எதி்ரொலித்தது. மேலும் நகர மையப்பகுதியில் கருமையாக புகை சூழ்ந்திருந்தது. சில உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் பெய்ரூட்டின் துறைமுகத்தில் வெடி விபத்து நடந்ததாக தகவல் தெரிவித்துள்ளன. 

துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும், வெடி விபத்தை அடுத்து நகரத்தில் ஒரு கரும் புகை வெளியேறியதாகவும் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் மீண்டும் தீ விபத்து
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தின் எண்ணெய் மற்றும் டயர் கிடங்கில் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...