உலக செய்திகள்

சிரியா ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் + "||" + Israeli missile strike on Syrian military positions

சிரியா ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியா ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
டமாஸ்கஸ்,

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது. இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. சிரியா எல்லைக்குள் நுழைந்து வான்தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் போர் விமானங்களை சிரிய வான்பாதுகாப்பு படை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கிறது.

இந்த நிலையில் சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள குனேத்ரா மாகாணத்தில் சிரியா ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது சிரியா ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும், அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இஸ்ரேலின் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ரக ஹெலிகாப்டர்கள் சிரியா ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் சிரியா ராணுவத்தின் கண்காணிப்பு நிலையங்கள், உளவுத்துறை சேகரிப்பு மையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் ஆகியவை நிர்மூலமாக்கப்பட்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் தொடரும் அத்துமீறல்; இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
2. பா.ம.க. கொடிக்கம்பம் மீது தாக்குதல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. கொடிக்கம்பம் மீது தாக்குதல் நடத்தியது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
3. நெல்லை தச்சநல்லூரில் பரபரப்பு: வாலிபரை தாக்கிய 8 பேர் கைது தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் திடீர் உண்ணாவிரதம்
நெல்லையில் வாலிபரை தாக்கியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் திடீரென உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. மெஞ்ஞானபுரம் அருகே வக்கீலை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது வழக்கு
வக்கீல் தாக்கப்பட்டது தொடர்பாக, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது கோர்ட்டு உத்தரவின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
5. இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் கத்திக்குத்து; 3 பேர் பலி-வாலிபர் கைது
இங்கிலாந்தில் உள்ள ஒரு பூங்காவில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...