உலக செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு + "||" + New Virus Alert: 7 Dead, 60 Infected in China, Tick Bite is Transmission Route

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு
சீனாவில் உண்ணி கடியால் பரவும் புதிய தொற்று நோயால் 7 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
பீஜிங்

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவலால் வல்லரசு நாடான அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்னும் சில மருத்துவ பரிசோதனைகள் எஞ்சியுள்ளதால், கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. 

இதனால், மனித குலத்திற்கு இன்னும் பெரும் சவாலாகவே கொரோனா வைரஸ் விளங்கி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  7.10 லட்சமாக- ஆக  உள்ளது.  கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  1.21 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகம் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது, இந்த நிலையில் ஒரு புதிய வைரஸின் அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு மருத்துவ அதிகாரிகளிடையே அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.

சீன நாளேடான 'குளோபல் டைம்ஸ்'வெளியிட்டு உள்ள தகவல்படி  ஒருவகை உண்ணி கடித்தால் ஏற்படக்கூடிய புதிய வகை வைரஸ் சீனாவில் உருவாகி வருகிறது. இதுவரை கேள்விப்படாத இந்த வைரசால் ஏற்கனவே குறைந்தது ஏழு பேர் பலியாகி உள்ளனர்மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

இந்த வைரசால் த்ரோம்போசைட்டோபீனியா நோய் அறிகுறியுடன் கடுமையான காய்ச்சல் ஏற்படும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 37 க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்  பின்னர் கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிஜியாங் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையின் மருத்துவர் ஷெங் ஜிஃபாங், மனிதனுக்கு மனிதனுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. நோயாளிகள் இரத்தம் அல்லது சளி வழியாக மற்றவர்களுக்கு வைரஸ் பரவும். பெரும்பாலும் உண்ணிகடித்தல் முக்கிய பரிமாற்ற வழி என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் வரை, இதுபோன்ற வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என கூறினார்.

டிக் போர்னே வைரஸ் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “இந்த வைரஸ் கொரோனாவைப் போல சவாலாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வைரஸ் உண்ணி, ஈக்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ளது. மேலும் ரத்தம், சளி, இருமல் மூலமும் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவுகிறது” என்று எச்சரித்துள்ளனர்!


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஆகஸ்ட் வரை 6.4 கோடிபேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் - செரோ சர்வேயில் தகவல்
ஆகஸ்ட் மாதம் வரை முதல் கட்ட செரோ சர்வேயில் பாதிக்கப்பட்ட அளவிலிருந்து 10 மடங்கு பாதிப்பு இருக்கலாம். அதாவது 6.4 கோடிபேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உத்தேசமாகத் தெரிவித்துள்ளது.
2. 15 கோடி விரைவான கொரோனா சோதனை கருவிகள் விநியோகிக்கும் திட்டம் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க அரசு அடுத்த சில வாரங்களில் 15 கோடி விரைவான, கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை விநியோகிக்கும் என்று அறிவித்து உள்ளார்.
3. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
4. நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகள்: புதிய சோதனைக்கருவிகள் விரைவில் அறிமுகம்
நிமிடங்களில் சோதனை முடிவுகளை கொடுக்கக்கூடிய கொரோனா சோதனைக்கருவிகள் விரைவில் உலகம் முழுவதும் கொண்டுவரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
5. பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...