உலக செய்திகள்

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பதிவு செய்யும் ரஷியா + "||" + World's first Covid-19 vaccine to be registered next week by Russia: Report

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பதிவு செய்யும் ரஷியா

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பதிவு செய்யும் ரஷியா
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மாஸ்கோ

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசால்  தற்போது உலக முழுவதும் சுமார் 1.9 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.

உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.

கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியது.
ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து  உள்ளன இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் மிக்ஹைல் முரஸ்கோ கூறியதாவது:-

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்யப்படவுள்ளது. 2020 அக்டோபர் முதல் தடுப்பூசி மருந்துகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி தொடர்பான அனைத்துச் செலவுகளும் மாநில பட்ஜெட்டில் அடங்கும்.

இந்தத் தருணத்தில் மூன்றாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பரிசோதனை முயற்சிகள் மிக முக்கியம். நாங்கள் தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்துள்ளோம்என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை ரஷியா அறிவித்ததை அடுத்து, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா மரணங்களை விட ஊரடங்கால் மரணங்கள் அதிகம் இங்கிலாந்தில் ரகசிய ஆவண வெளியீடு
கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடினாலும், மறுபக்கம் வெளியே தெரியாத மற்றொரு பிரச்சினை அமைதியாக மக்களைக் கொன்றுகொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
2. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட, வாய்ப்பு -ஆய்வில் தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட, சவாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ ஆய்வு முடிவு ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.
3. கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே தோன்றியது மீண்டும் வலியுறுத்தும் - உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.
4. செப்டம்பர் 26 : தமிழக கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக
செப்டம்பர் 26 ந்தேதியில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக வருமாறு:-
5. உலகளாவில் தடுப்பூசிக்கு முன் கொரோனாஇறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு
உலகளாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு முன் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது..!