நாளுக்குநாள் பலூன் போல் ஊதிக்கொண்டே செல்லும் பெண்ணின் வயிறு வெடித்துவிடுமோ என அச்சம்


நாளுக்குநாள் பலூன் போல்  ஊதிக்கொண்டே செல்லும் பெண்ணின் வயிறு வெடித்துவிடுமோ என அச்சம்
x
தினத்தந்தி 8 Aug 2020 11:16 AM GMT (Updated: 8 Aug 2020 11:16 AM GMT)

சீனாவில் பெண் ஒருவரின் வயிறு பலூன் போல் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டே செல்லும் நிலையில், அதன் காரணம் அறியாமல் மருத்துவர்களே திகைத்துப்போயுள்ளார்கள்.

பீஜிங்

சீனாவை சேர்ந்தவர் ஹுவாங் குவாக்சியன் (38), இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய ஹுவாங் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாதாரணமாகத்தான் இருந்தார் . ஆனால், அதற்குப்பின் திடீரென அவரது வயிறு வீங்க ஆரம்பித்தது. இன்னும் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டிருக்கும் அந்த வயிறு மட்டுமே சுமார் 20 கிலோ எடை இருக்கிறது.அந்த வயிற்றுடன் வெகு நேரம் நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் ஹுவாங் திணறி வருகிறார் .

ஹுவாங்கின் கணவர் சம்பாதிப்பதற்காக வெளியூர் சென்றுவிட்ட நிலையில், பெரும்பாலான வீட்டு வேலைகளை அவரது 10 வயதான மகன் தான் செய்து வருகிறான். படுத்துத் தூங்கக் கூட முடியாத ஹுவாங் மருத்துவர்களிடம் சென்றபோது, அவர்களாலும் அவரது வயிறு வீங்கிக்கொண்டே செல்வதற்கான காரணத்தை கண்டுபிடிக முடியவில்லை.

இந்நிலையில், பெரிய மருத்துவமனை ஒன்று ஹுவாங்க்கு சிகிச்சையளிக்கக்கூடிய சிறப்பு மருத்துவர்கள் தன்னிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், ஹுவாங்க்குக்கான சிகிச்சைக்கு 3,290 பவுண்டுகள் தேவைப்படும் என மருத்துவமனை கூறியுள்ளதால், தனக்கு உதவுமாறு ஹுவாங் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story