இலங்கை புதிய அமைச்சரவையில் 26 அமைச்சர்கள் ; நமல் ராஜபக்சேவும் அமைச்சராகிறார் 14 ந்தேதி பதவிஏற்பு விழா


இலங்கை புதிய அமைச்சரவையில் 26 அமைச்சர்கள் ; நமல் ராஜபக்சேவும்  அமைச்சராகிறார் 14 ந்தேதி பதவிஏற்பு விழா
x
தினத்தந்தி 8 Aug 2020 11:32 AM GMT (Updated: 8 Aug 2020 11:32 AM GMT)

இலங்கை புதிய அமைச்சரவையில் 26 அமைச்சர்கள், நமல் ராஜபக்சேவும் அமைச்சராகிறார் 14 ந்தேதி பதவிஏற்பு விழா நடைபெறுகிறது.

கொழும்பு

இலங்கையில் புதிதாக அமைய உள்ள அரசின் அமைச்சரவையில் 26 அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் 40 அந்தஸ்தற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொகமது அலி சப்ரி, ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, நமல் ராஜபக்சே ஆகியோரும் அமைச்சரவை  அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளைய தினம் புதிய பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார். மகிந்த ராஜபக்சே களனி விகாரையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார்.

இதனையடுத்து கண்டி தலதா மாளிகையில் எதிர்வரும் 14 ஆம் தேதி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.


Next Story