சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்


சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்
x
தினத்தந்தி 8 Aug 2020 12:48 PM GMT (Updated: 8 Aug 2020 12:48 PM GMT)

சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

லண்டன்

இரு நாடுகளிலும் அருங்காட்சியகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அக்குவாரியம் ஆகிய உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பிற புதிய இடங்களான சினிமா தியேட்டர்கள், இறுதி சடங்கு நடக்கும் இல்லங்கள் மற்றும் ஸ்காட்லாந்தில் வங்கிகள், அழகு நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

திங்கள்கிழமை முதல் வடக்கு அயர்லாந்தில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாகிவிடும். இங்கிலாந்திற்கு வருகை தரும் பயணிகளுக்கான புதிய தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் வந்ததை தொடர்ந்து இந்த முகக்கவச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம், அன்டோரா மற்றும் பஹாமாஸில் இருந்து இப்போது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அல்லது வடக்கு அயர்லாந்திற்கு வரும் அனைத்து பயணிகளும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்த வேண்டும்.முன்னதாக ஸ்பெயின் மற்றும் லக்சம்பேர்க்கில் இருந்து வந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்தல்கள் மீண்டும் விதிக்கப்பட்டன.

சுவிட்சர்லாந்தில், ஒரு பக்கம் அரசு பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய வற்புறுத்துகிறது.மறுபக்கம் மாஸ்க் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீதம் மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. முகக்கவசம் அணிந்தவர்களை ஏதோ வேற்றுக் கிரகத்தவர்கள் போல் பார்ப்பது, நக்கலாக சிரிப்பது ஆகியவையும் நடக்கிறதாம்.


Next Story