இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் அதே எண்ணிக்கையில் ஊரடங்காலும் மரணமடைந்துள்ளனர்.


இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் அதே எண்ணிக்கையில் ஊரடங்காலும் மரணமடைந்துள்ளனர்.
x
தினத்தந்தி 8 Aug 2020 3:24 PM GMT (Updated: 8 Aug 2020 3:24 PM GMT)

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் அதே எண்ணிக்கையில் ஊரடங்கு காரணமாகவும் மரணமடைந்துள்ளனர்.

லண்டன்

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் அதே எண்ணிக்கையில் ஊரடங்கு காரணமாகவும் பலர் மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

வெளியான அறிக்கையின் அடிப்படையில், கொரோனா நோயாளிகளில் மூவர் இறக்கும் அதேவேளையில், முக்கிய மருத்துவ சிகிச்சைகளை ஊரடங்கால் தவறவிட்ட இன்னொரு இருவர் மரணமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மார்ச் முதம் மே மாதம் வரையான காலகட்டத்தில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 25,000 பேர் மரணமடைந்துள்ளனர்.அதேவேளை, கொரோனாவுக்கு பயந்து மருத்துவமனைக்கு செல்ல மறுத்து மரணமடைந்த 6,000 பேர்களுடன் மொத்தம் 16,000 பேர் ஊரடங்கால் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க அனைவரும் குடியிருப்பிலேயே தங்கியிருக்க அரசு அறிவுறுத்தலை கடைபிடித்த மக்கள் முக்கிய மருத்துவ சிகிச்சைகளை தவறவிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், மருத்துவமனைகளில் இருந்து முன்னரே விடுவிக்கப்பட்ட முதியவர்கள் சுமார் 10,000 பேர் அவர்கள் தங்கியிருந்த முதியோர் இல்லங்களில் மரணமடைந்துள்ளனர். இவர்களுக்கு உரிய சிகிச்சை தேவையான வேளையில் வழங்கப்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.

சுகாதார கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் இருப்பதால் செப்டம்பர் மாதத்திற்குள் மேலும் 26,000 இறப்புகளை இங்கிலாந்து எதிர்கொள்ள இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


Next Story