உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் பறந்த சாம்பல் துகள்கள் + "||" + Indonesia’s Sinabung volcano erupts, sending column of ash 5,000 m into sky

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் பறந்த சாம்பல் துகள்கள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் பறந்த சாம்பல் துகள்கள்
இந்தோனேசியாவில் எரிமலை இன்று வெடித்ததில், 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் சாம்பல் துகள்கள் பறந்தன.
இந்தோனேசியா,

இந்தோனேசியாவில் சுமார் 400 ஆண்டுகள் பழைமையான மற்றும் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 120 எரிமலைகள் உள்ளன. இதில் சினாபங் என்ற எரிமலை அவ்வப்போது வெடித்து அச்சுறுத்தி வருகிறது.

சினாபங் கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. இதனால் எந்த நேரத்திலும் வெடித்து எரிகுழம்பை கக்கலாம் என்பதால், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 30 ஆயிரம் மக்கள் முன்னெச்சரிகையாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் எரிமலை இன்று காலை திடீரென வெடித்து எரிகுழம்பை கக்கியது. எரிமலை வெடித்த வேகத்தில் சாம்பல் துகள்கள் 16,400 அடி உயரத்திற்கு பறந்தன. மேலும் சாம்பல் துகள்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஏற்பட்ட எரிமலை வெடிப்பில்  எந்தவிதமான உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படவில்லை என்று இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் தீங்கு குறைப்பு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை
இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை விதிக்கப்படுகிறது.
2. இந்தோனேசியாவில் இன்று காலை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிகவும் சக்தி வாய்ந்த கடல் பகுதியில் ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டது,
3. இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியது
இந்தோனேசியாவின் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியுள்ளது.
4. குழந்தை பிறப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகத்தான் தான் கர்ப்பமானதாக கூறும் அதிசயபெண்
இந்தோனேசியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.