உலக செய்திகள்

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டி + "||" + Senator Kamala Harris Democrats' Pick For US Vice-President Post

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டி

அமெரிக்க துணை அதிபர்  பதவிக்கு  இந்திய வம்சாவளியை  சேர்ந்த  கமலா ஹாரீஸ்  போட்டி
ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில், ஜோ பிடன் இருமாதங்களாக ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜோ பிடன் அறிவித்தார். டுவிட்டரில் இது குறித்து ஜோ பிடன் கூறுகையில், “  துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மிகச்சிறந்த மக்கள் சேவகர்களில் ஒருவர் கமலா ஹாரீஸ் “ என்று தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரீஸின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஆவர். அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தாயார் இந்தியர் ஆவார்.  கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனராலாக தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் கமலா ஹாரீஸ் தான் ஆவார்.  அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தென் ஆசிய  பாரம்பரியத்தை கொண்ட முதல் பெண் என்ற பெருமையையும் கமலா ஹாரீஸ் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கமலா ஹாரிஸ் வென்றால் அமெரிக்காவுக்கே அவமானம் -டிரம்ப் கடும் விமர்சனம்
கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவுக்கு அவமானம் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.
2. தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசி: டிரம்பின் அறிவிப்பை நம்ப மாட்டேன் - கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.
3. இந்தியாவுக்கு அமெரிக்கா அடுத்த வாரம் வென்டிலேட்டர்கள் அனுப்புகிறது: பிரதமர் மோடியிடம் டிரம்ப் தகவல்
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக, இந்தியாவுக்கு அமெரிக்கா அடுத்த வாரம் வென்டிலேட்டர்கள் அனுப்ப உள்ளதாக பிரதமர் மோடியிடம் டிரம்ப் தகவல் தெரிவித்தார்.
4. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி - ‘இனி இப்படி நடக்காது என்பதற்கு உறுதி அளிக்க வேண்டும்’
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இதுபோன்று மீண்டும் நடக்காது என்பதை சீன கம்யூனிஸ்டு கட்சி உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
5. வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஈரான் கண்காணித்து வருகிறது - அதிபர் ரவுகானி
வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை, ஈரான் நெருக்கமாக கண்காணித்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...