பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் துணை ராணுவ படை வீரர் உள்பட 6 பலி


பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் துணை ராணுவ படை வீரர் உள்பட 6 பலி
x
தினத்தந்தி 12 Aug 2020 2:31 AM GMT (Updated: 12 Aug 2020 2:31 AM GMT)

பாகிஸ்தானில் ஒரு சந்தையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் துணை ராணுவ படை வீரர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


* லிபியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் மேற்கு கடலோர பகுதி வழியாக படகுகளில் சட்டவிரோதமாக பயணம் செய்த 160 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

* ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் உளவு வேலையில் ஈடுபட்டதாகக் கூறி ரஷிய தூதரக அதிகாரிகள் 3 பேரை அந்த நாட்டு அரசு நாடு கடத்தி உள்ளது. ஸ்லோவாக்கியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த கார் குண்டு வெடிப்பில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

* சீனாவின் எதிர்ப்புகளை தவிர்ப்பதற்காக தைவான் பிற நாடுகளுக்கு கொரோனா உதவிகளை ரகசியமாக அனுப்பி வந்ததாக தைவான் வெளியுறவு மந்திரி ஜோசப் வூ கூறினார்.

*இந்துக்களின் புனித பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வங்காளதேசத்தில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்துக்களுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அதிபர் அப்துல் ஹமீது தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

* பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரில் உள்ள ஒரு சந்தையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் துணை ராணுவ படை வீரர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

Next Story