உலக செய்திகள்

ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் மக்கள் + "||" + Hong Kong residents buy newspaper to support free press

ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் மக்கள்

ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் மக்கள்
ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து, செய்தித்தாள்களை வாங்கி மக்கள் குவித்து வருகின்றனர்
ஹாங்காங், 

ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது.

இந்த செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் நிறுவனரான 72 வயதான ஜிம்மி லாய் மற்றும் அவரது 2 மகன்களை ஹாங்காங் போலீசார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைதுசெய்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் போலீசாரின் இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் செயல் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரிக்கும் விதமாக மக்கள் ஆப்பிள் டெய்லி செய்தித்தாளை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஆப்பிள் டெய்லி செய்தித்தாளின் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஹாங்காங்கில் செய்தித்தாள் விற்பனை செய்துவரும் ஒருவர் இதுகுறித்து கூறுகையில் “ஒரு நாள் முழுவதும் எனக்கு 100 செய்தித்தாள்களுக்கும் குறைவாகவே விற்பனை இருக்கும். ஆனால் இன்று அதிகாலையிலேயே 200 செய்தித்தாள்கள் விற்று தீர்ந்து விட்டன. ஒரே நபர் 2-க்கும் மேற்பட்ட செய்தித்தாள்களை வாங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவிப்பு - ராஜஸ்தான் அரசுக்கு சிக்கல்
முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக சச்சின் பைலட் அறிவித்துள்ளதால், ராஜஸ்தான் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2. ஹாங்காங்கில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக அறிவிப்பு
ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதால், கடந்த மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
3. ஹாங்காங்கில் மாணவர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட தடை
ஹாங்காங்கில் மாணவர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. ஹாங்காங் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் சட்ட மசோதா - சீன நாடாளுமன்றத்தில் தாக்கல்
ஹாங்காங் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் சட்ட மசோதா சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.